90 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்!

 


இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் (Death Penalty for Terrorists Bill, 2026) நிறைவேற்றப்பட்டுள்ளது.


இஸ்ரேல் நாடாளுமன்றமான 'கினெசட்' (Knesset), பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் சட்டத்தை நேற்றுமுன்தினம் நிறைவேற்றியுள்ளது. 


இந்தச் சட்டம் குறித்து எழுந்துள்ள மிக முக்கியமான மற்றும் கவலையளிக்கக்கூடிய விமர்சனம் என்னவென்றால், "இந்த மரண தண்டனைச் சட்டம் பிரத்யேகமாக பாலஸ்தீனியர்களை மட்டுமே இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதாகும்" (Israel passes death penalty law 'exclusively aimed at Palestinians').


இந்த புதிய சட்டத்தின்படி, "இஸ்ரேல் அரசின் இருப்பை மறுக்கும் நோக்கில்" அல்லது பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஒருவரைக் கொலை செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தண்டனை விதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இதில் உள்ள மிகக் கடுமையான விதியாகும்.


இராணுவ நீதிமன்றங்கள் மூலம் வழங்கப்படும் இந்தத் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன.


ஆனால் இஸ்ரேலியர்களால் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் பாலஸ்தீனியர்களுக்கு நீதி வழங்க எவரும் இல்லை. 


இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் அதன் விதிகள் குறித்து சர்வதேச சட்ட நிபுணர்கள் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்:


இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது யூதர்களால் செய்யப்படும் இதேபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாத வகையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்கும் அல்லது ஒடுக்கும் பாராபட்ச நோக்கம் கொண்டது.


இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-கிவிர் (Itamar Ben-Gvir) மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே உற்சாகமாகக் கொண்டாடினர். 


தூக்குக் கயிறு போன்ற சின்னங்களை அணிந்து அவர்கள் காட்டிய மகிழ்ச்சி, சமூக வலைதளங்களில் "மனிதாபிமானமற்ற செயல்" என விமர்சிக்கப்பட்டு வருகிறது.


சட்டம் நிறைவேற்றப்பட்டதை ‘Champagne’குடித்துக் கொண்டாடிய இஸ்ரேலிய அமைச்சர்களின் செயல், அவர்களின் இரக்கமற்ற மனப்போக்கை (Sadist Mindset) உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. 


இது ஒரு நாட்டின் நீதித்துறை நடவடிக்கையாகத் தெரியாமல், ஒரு இனத்தின் மீதான வன்மமாகவே பார்க்க வேண்டும்.


ஒருபுறம் இஸ்ரேலிய வலதுசாரி அமைப்புகள் இதனை 'நீதி' எனக் கொண்டாடினாலும், மறுபுறம் "இந்தக் கொண்டாட்டங்கள் அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதையே காட்டுகிறது"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.