சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்)மருத்துவப் பரிசோதனைக்காக வெளியே வந்தார்!📸
தடுப்புக்காவலில் குற்றப்புலனாய்வுத்துறையின் பொறுப்பில் இருந்த கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் கடந்த 2006 ம் ஆண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
சட்ட மா அதிபரின் மேலதிக ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் (02) நீண்ட நாட்களின் பின்னர் சட்ட மருத்துவத் தேவைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டு மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப் பட்டுள்ளது...
செய்தியாளர் பிரதீபன்
RKS


.jpeg
)





கருத்துகள் இல்லை