இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டி?


தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கில் நடிகை த்ரிஷா போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலை 8 மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1.20 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.


மேலும், திருச்சி கிழக்கில் 29884 வாக்குகள் பெற்று, 12173 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


இரண்டு தொகுதியில் வென்றால் ஏதாவது ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.


இந்த நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் இராஜிநாமா செய்வார் என்றும் அத்தொகுதியில் மீண்டும் நடைபெறும் இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


#தமிழ்நாடு_தேர்தல்2026 #trendingnow #TamilNaduElection2026 #TVKVijay

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.