அரசியல் 'கேடுகெட்டது' என்பது நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு 'கேவலங்கெட்டது' என்பதை கொஞ்சம் பார்ப்போமா.?


முதலமைச்சர் விஜய்யின் தவெகவில் போட்டியிட்டு அமைச்சராகியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின் என்பவரின் மகளைத் திருமணம் செய்துள்ளார். 


ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் - விஜய்க்கு எதிரான அதிமுக கட்சியில் இணைந்து போட்டியிட்டு வென்றார்.


தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர் லீமா ரோஸ்தான். அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 5863.72 கோடி. 


அதிக சொத்துக்களைக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றார் லீமா ரோஸின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. 


தேர்தலில் 'எதிரும் புதிருமாக' இருந்த மருமகனும் மாமியாரும், இப்போது ஒன்றாகியுள்ளனர். 


⭕நடந்தது என்ன?


தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவைக் கோரும் - நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 


விஜய் தரப்பிடம் 107 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் பெரும்பான்மை பெறுவதற்காக 118 ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். 


இன்றைய வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டது. அதில் எடப்பாடிக்கு எதிரான அதிமுக அணியைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள், விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த 25 பேரில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸும் ஒருவர் என்பதுதான் 'ஹைலைட்'.


இது தேர்தலுக்குப் பிறகு நடந்த மாற்றமா? அல்லது தேர்தலின் போதே, லீமா ரோஸ் திட்டமிட்டு விஜய்க்கு எதிரான அணிக்குள் விஜய் தரப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன?


லீமா ரோஸின் பணம் - பதினொன்றும் செய்யும்.


(படம்: லீமா ரோஸ் மற்றும் ஆதவ் அர்ஜுனா)


#tamilnadupolitics #cmvijay #SantiagoMartin #leemarose #tvk #ADMK #ulmabrook

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.