ரஷ்யாவின் எல்லைப்புற திசையிலிருந்து பின்லாந்தை நோக்கி வந்த வெடிபொருள் ட்ரோன்கள்!
ஹெல்சிங்கி – போர்வோ பகுதி பெரும் ஆபத்தில் இருந்தது
ரஷ்யா திசையிலிருந்து வெடிபொருள் ஏற்றப்பட்ட ட்ரோன்கள் பின்லாந்தை நோக்கி வந்ததால், ஹெல்சிங்கி மற்றும் போர்வோ இடையிலான மாகாணப் பகுதிகளில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலின் போது, சில ட்ரோன்கள் வழிதவறி பின்லாந்து எல்லையை நோக்கி நகர்ந்ததாக பின்லாந்து பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்ய மின்னணு குறுக்கீடு, எதிர்ப்பு தாக்குதல் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகாலை 1 மணிக்கே பின்லாந்து அதிகாரிகளுக்கு முன் எச்சரிக்கை கிடைத்ததால், ஹெல்சிங்கி – போர்வோ இடையிலான பகுதிகளில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வான்வழி மற்றும் கடல்வழிப் பகுதிகள் மூடப்பட்டதுடன், மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ட்ரோன்கள் இறுதியில் பின்லாந்து எல்லைக்குள் நுழையவில்லை. எனினும், அவை நாட்டின் மிக அதிக மக்கள் வாழும் மாகாணப் பகுதிகளைத் தாக்கியிருந்தால் பெரும் உயிர் மற்றும் பொருளாதார சேதம் ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்புத் தரப்புகள் எச்சரித்துள்ளன.
போர்வோவில் உள்ள Neste எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், Vuosaari துறைமுகம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் ஆபத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் வான்படை உட்பட்ட பாதுகாப்புக்கட்டமைப்புகள் இந்த வகையான ட்ரோன் அச்சுறுத்தல்களை மிகவும் துல்லியமாக அவதானித்து முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை