கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்கள் உயிருடன் மீட்பு. !

 


கொழும்பு துறைமுகநகரில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்கள் உயிருடன் மீட்பு. 


வெள்ளி மாலை சுமார் 4.30 மணியளவில் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர கடற்பகுதியில் நீராட சென்ற 16 வயதுடைய கொழும்பு 14 பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்களில் இருவர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அகில் மற்றும் அஹமட் என அடையாளம் காணப்பட்ட அந்த இரு சிறுவர்களும் கடலில் சிக்கிய நிலையில், அப்பகுதியில் கரையோர காவலர் (Lifeguard) சேவையில் ஈடுபட்டிருந்த ஷாஹித் மிஷ்கின் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய காவலர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலுக்குள் சென்று வீரத்துடன் இருவரையும் உயிருடன் மீட்டுள்ளனர்.


மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு உடனடியாக PCR முதலுதவி வழங்கப்பட்டதுடன், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மேலும், உயிர்காக்கும் பணியில் ஈடுபட்ட ஷாஹித் மிஷ்கின், இதற்கு முன்னரும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து சம்பவத்தின் போது பலரது உயிர்களை காப்பாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.