சேதமாக்கப்பட்ட தண்டவாளம்!!
வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில்வே அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 1.7 மில்லியன் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் விபத்தினால் சுமார் 200 அடி நீளமுல்ல ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மற்றும் பிற ரயில் பிரிவுகள் சேதமடைந்ததாக ரயில்வே மற்றும் பொறியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேதமான பகுதிகள் தற்போது புனரமைக்கப்பட்டுவிட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரயில்வே அமைப்பு, சமிக்ஞை அமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட மொத்த சேத மதிப்பீடு, அடுத்த சில நாட்களில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை