மறைந்த ஈரான் தலைவர் இறுதி ஊர்வல நிகழ்வில் 2 கோடி பேர் பங்கேற்பு..!


அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான நிகழ்வு (ஜூலை 4) ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


ஈரான் அரசு மற்றும் இறுதிச்சடங்கு ஏற்பாட்டாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, இந்த வாரம் முழுவதும் நடைபெறும் பல்வேறு நகர ஊர்வலங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இறுதி நிகழ்வுகளில் கிட்டத்தட்ட 2 கோடி முதல் 3 கோடி வரை (20 to 30 Million) மக்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சில நாட்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


காமேனியின் உடல் தெஹ்ரான், கொம் மற்றும் ஈராக்கின் புனித நகரங்களான நஜாப், கர்பலா ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உள்ள இமாம் ரெஸா மதவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


இந்த நிகழ்வில் மக்கள் "பழிக்குப்பழி" (Revenge) என்ற #கோஷங்களை எழுப்பி, காமேனியின் படங்களைத் தாங்கியவாறு பெரும் திரளாகக் கூடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.