யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் 5000 சுகப் பிரசவங்கள்!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார்- 5000 சுகப் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச் சுகப் பிரசவங்கள் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்கள் முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுவதாக    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று (06.07.2026) தெரிவித்துள்ளார்.     


குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பையும் , தொழில்முறைச் சேவையையும் பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கில் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் இன்றைய தினம் மேற்படி வைத்தியசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.