இரண்டு சீனர்கள் வரலாற்றுச் சாதனை!!
கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த 35 வயதான ஹோங் வாங்கி மற்றும் 37 வயதான யு டெங் ஆகிய இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான கணிதப் புதிர்களுக்குத் தீர்வு கண்டதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது.
இதில் ஹோங்வாங்கி, 1917இல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி காக்கியா முன்வைத்த காக்கியா ஊசிப் புதிருக்கு முப்பரிமாண அடிப்படையில் விடை கண்டுள்ளார்.
ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெறும் வரலாற்றின் 3ஆவது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங்கி பெற்றுள்ளதால், இச்சாதனை சீனாவில் பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
6சீனாவில் பிறந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயர்கல்வி கற்ற இவ்விரு பேராசிரியர்களுக்கும் உலகளாவிய கணித வல்லுநர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை