பிரான்ஸில் காட்டுத்தீ!!




தென்மேற்கு பிரான்ஸின் 'காப் ஃபெரெட்' தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.



இதுவரை 10,000 ஹெக்டேயர் பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதிகள் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயின் அச்சுறுத்தலால் சுமார் 40,000 மக்கள் படகுகள் மற்றும் சாலைகள் வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகிலும் காட்டுத்தீ பரவி வருவதால், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாகக் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் விசேட தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.