சுரேஷ் சாலே வழக்கு நாளை விசாரணை!!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சாலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்
இருதரப்புச் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு மீதான மேலதிக விசாரணைக்கான திகதி நாளை நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை