சிறுமி மரணம்!!
மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றைட தினம், தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.
கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாக ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாரதிகளின் இவ்வாறான கவனமற்ற செயற்பாடுகளால் ஏற்படும் அநியாயமான உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை