அகவை நாளில் அகம் மகிழ்ந்து உதவி வழங்கிய புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் ஒரு குடும்பத்தினர் தமது மகளின் பிறந்த தினத்தை (23.07.2026) முன்னிட்டு தடயம் அறக்கட்டளை ஊடாக இயங்கிவரும் தடயம் அறிவுச்சோலை மாணவர்களுக்கு உணவு மற்றும் சீருடைகள் என்பவற்றை வழங்கியுள்ளதுடன் முதியவர்கள், பெற்றோர்கள் என பலருக்கும் உணவு வழங்கியுள்ளார்கள்.
அத்துடன் இவர்கள் தொடர்ந்தும் இக்கல்வி நிலையத்துக்கான சமூகசேவைச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளின் மகிழ்ச்சியான நாளை, இவ்வாறு பின்தங்கிய, கிராம மக்களோடு கொண்டாடி மகிழ்ச்சி அடைந்த இக்குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
தமிழருள் இணைய தளம் சார்பில் நாங்களும் எயது வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.




.jpeg
)





கருத்துகள் இல்லை