நட்பியல் - சுரேஷ் தர்மா!!!

 











தொலைதூரத் தொடர்பின்

உரையாடல்,

கடல் கடந்தும்

மனம் இணையும்

உன்னத உணர்வு இது.


சுயநலமற்ற

அன்பின் வடிவம்

ஆதலால்தான்

நட்பின் நாளம்

கொப்பளித்துக்

கொண்டே இருக்கும்

இறக்கும் வரை.


யார், எவர் என்று அறியாமல்

இதயங்கள் இணையும்

இன்பத் திருத்தளம்.


நயவஞ்சகம் அற்றது நட்பு,

நல் மனம் கொண்டது நட்பு,

நாநிலம் போற்றும் நட்பு.


முன்னுக்கு முரண் அற்றும்,

பின்னுக்கு புறண் அற்றும்,

நெஞ்சுடை நேர்மையுடன்

நிற்பதே நட்பியல்...!!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.