சி. டி. விக்ரமரத்ன சந்தித்த முக்கிய அரசியல் பிரமுகர்!!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார் எனவும்
இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார்.
அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம்.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

.jpeg
)





கருத்துகள் இல்லை