டயானா தொடர்பாக வெளியாகும் புத்தகம்!!

 



பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார்.


டயானாவின் மறைவு நாள் நெருங்கி வரும் நிலையில், அவரது நினைவாக Swan Song: Diana, My Sister என்ற புத்தகம் வரும் செப்டம்பர் 22-ம் திகதி பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இது 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது

.டயானா குறித்து காலப்போக்கில் பரவிய பல பொய்களை தகர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக சார்லஸ் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா காலமான பிறகு, அவரது இறுதிச்சடங்கில் உருக்கமான உரையாற்றிய அவர், டயானாவின் மகன்களான வில்லியம் மற்றும் ஹரி ஆகியோருடன் இன்றும் நெருக்கமான உறவை பேணி வருகிறார்.

தற்போதைய ராஜ குடும்பத்தின் சூழ்நிலைகள் மற்றும் டயானாவின் உண்மையான வாழ்க்கை முறையை அவரது சொந்த சகோதரரின் கண்ணோட்டத்தில் இந்த புத்தகம் விவரிக்கிறது.

டயானாவின் நினைவை போற்றுபவர்களுக்கும், அவரை நேரில் அறியாத இளம் தலைமுறையினருக்கும் இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும் என்று பதிப்பகம் தெரிவித்துள்ளது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.