அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு!!

 



உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், மற்றும் முக்கிய உணவு உற்பத்தி நாடுகள் தமது உள்நாட்டு நுகர்வை உறுதி செய்வதற்காக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக அமைவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.