வெளியே வந்தார் ஜோசித!!

 




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.


இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.  

நடைமுறைக்கு மாறாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணையில் யோஷித ராஜபக்சவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, ​​குற்றப்புலனாய்வுத்துறை இதற்கு முன்னர் பல சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யோஷித ராஜபக்சவிடம் வாக்குமூலம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மேலும் பல வாகனங்கள் குறித்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.