சாலை விபத்துகளில் சுமார் 30% விபத்துகளுக்கு தெருநாய்களே காரணம் !
நாட்டில் இடம்பெறும் சாலை விபத்துகளில் சுமார் 30% விபத்துகளுக்கு தெருநாய்களே காரணம் என Association of Veterinarians for Humane Management of Animal Population என்ற அமைப்பின் நிறுவுநர், கால்நடை மருத்துவர் சமித் நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், தெருநாய்கள் கடிப்பதால் ஏற்படக்கூடிய வெறிநாய் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் தடுப்பூசிகளுக்காக ஆண்டுதோறும் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாய்களைப் பதிவு செய்வதன் மூலம், உரிமையாளர்களைக் கொண்ட நாய்களின் பொறுப்பு அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். அதேவேளை, உரிமையாளர்கள் இல்லாத தெருநாய்களின் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
நாய்களை பொது இடங்களில் கைவிடுவது குற்றமாக்கப்படுவதுடன், ரூ.10,000 வரை அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வணிகரீதியான நாய் இனப்பெருக்க நிலையங்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டு, விதிகளை மீறினால் ரூ.10,000 வரை அபராதம் அல்லது 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். நாய் தாக்குதலால் மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கும் உரிமையாளர்கள் சட்டரீதியாக பொறுப்பேற்க வேண்டும். மேலும், நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாய் கணக்கெடுப்பு நடத்தவும், வெறிநாய் ஒழிப்புக்கான தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை அமைக்கவும் இந்த சட்டமூலம் முன்மொழிகிறது.
உரிமையாளர்கள் இல்லாத தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை (வந்த்யமாக்கல்) செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை