மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய 'கொப்பறா' மீன்
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோகிராம் எடையுடைய அபூர்வ 'கொப்பறா' மீன் ஒன்று நேற்று 14) சிக்கியுள்ளது.
ஆழ்கடலில் வாழக்கூடிய இந்த மீன் வகையானது வேகமாக நீந்தக்கூடிய நீளமான மூக்குப் பகுதியைக் கொண்டதுடன், வழக்கமாகப் பிடிக்கப்படும் மீன்களை விடப் மிகப்பெரியதாகக் காணப்பட்டதால் மீனவர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த ராட்சத மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுப் பரவி வருகின்றன.


.jpeg
)





கருத்துகள் இல்லை