உணவு விலைகள் குறைப்பு!!
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவப்பொருட்களின் விலைகளை நேற்று (17) நள்ளிரவு முதல் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கொத்து, ஃபிரைட் ரைஸ், மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நேற்று (17) நள்ளிரவு முதல் குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொத்து மற்றும் ரைஸ் விலைகளில் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சிற்றுண்டிகளின் விலைகளை ரூ. 2.50 குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
LAUGFS எரிவாயுவின் விலைக் குறைப்புடன் ஒப்பிடுகையில், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை