கவி அஞ்சலி!!

 



மாடப்புறாக்களின் 

மலர் வனத்தில்

வாசம் செய்கிறது

செம்போத்து ஒன்றின்

குத்தகை கனி



தீயற்ற களிம்பு விறகில்

ஒளிந்திருக்கிறது

பூ ஒன்றின் 

உறுமல் ஒலி.


கால நெருப்பால்

அணைக்கப்படாத

மண்மகனை

மனக்கீரிடத்தால் 

அஞ்சலிக்கிறார்கள்


பளிங்கு பூசிய 

பெருந்தகைகளில் 

கொப்பளிக்கிறது 

பொய் நாவுகள்


நீதியின் தராசில்

நிறுவையிடுகிறது

அபிமானிகளின்

அக உலகம்


சாயாத தீரமொன்றின்

சங்கு குரல்வளை

காலன் கயிற்றில்

இழுத்து அழிக்கப்பட்டது.


மனவானமெங்கும்

இருள் கிடக்க

மண்டியாடுகிறது

பூக்காடுகள்....



கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.