வாகன விபத்தொன்றிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பினார் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்.[படங்கள் இணைப்பு]

சற்றுமுன் வாகன விபத்தொன்றிலிருந்து வடமாகாணசபை

உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்றுகாலை வவுனியா கற்குளத்தில் நிகழ்வொன்றில் கலந்துவிட்டு செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது பூனாவ என்னும் இடத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்தின் (car) முன் இயத்திரக் கவசம் (வொனட்) கழன்று முன் கண்ணாடியில் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி சுதாகரித்துக்கொண்டதால் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் தெய்வாதீனமாக வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் காயங்களின்றி தப்பியுள்ளார்.

1

2

3