உலக ரசிகர்களைச் சென்றடையும் இலங்கையின் முதல் தமிழ்ப்பெண் இசையமைப்பாளர்-பிரபாலினி பிரபாகரனின்!

ஈழத்து மெல்லிசைக் குயில்” பிரபாலினி பிரபாகரன் இலங்கையின் முதல் தமிழ்ப்

பெண்ணிசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். இவர் இயற்றி, இசையமைத்து, பாடிய “queen cobra” இசை album இப்பொழுது “SONY” malaysia” மற்றும் “super star records” malaysia நிறுவனங்கள் மனமுவந்து முன்வந்து சர்வதேச அளவில் digital distribution செய்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன் மற்றும் #இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் hollywood தரத்தில் தயாராகியுள்ள இந்த “Queen Cobra” ஆல்பமே சர்வதேச அளவில் பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் இசை ஆல்பமாகும்.
California வை சார்ந்த “rhythms records” தயாரிப்பில் உருவாகிய “Queen Cobra” இசை கோர்வை Bravo நிறுவனத்தால் சென்னையில் வெளியிடப்பட்டது. சர்வதேச அளவில் பல்வேறு மொழிகளில் உருவான இந்த “queen cobra” இசை ஆல்பம் மற்றும் வீடியோ வெளியீட்டுவிழா நிகழ்வு பிரமுகர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரபாலினியின் உழைப்பை, திறமை, அவரது தன்னம்பிக்கை முதலானவற்றைப் பாராட்டுவதாவும், ஒரு பெண்ணாக இசைத்துறையில் தொடர்ந்து சாதனைகள் செய்யவேண்டுமென ஊக்குவிப்பதாகவும் அமைந்த இந்த விழாவில் மதிப்பிற்குரிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான உயர்திரு. திருச்சி சிவா அவர்கள், மூன்று தலைமுறை திரையிசைக் கவிஞர் உயர்திரு புலவர் புலமைபித்தன் அவர்கள், இசையமைப்பாளர் உயர்திரு. கங்கைஅமரன் அவர்கள், இசையமைப்பாளர் உயர்திரு. ஸ்ரீகாந்த் தேவா அவர்கள், நடிகர் பாடகர் இசையமைப்பாளர் உயர்திரு. மாணிக்கவிநாயகம் அவர்கள், லக்ஷ்மண் சுருதி இசைக்குழுவின் தலைவர் உயர்திரு. லக்ஷ்மண் அவர்கள், ஊடகவியாளர் உயர்திரு. டி.எஸ். மணி அவர்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர், “கலைவாணர் புகழ் பரப்புநர்” உயர்திரு சோழ. நாகராஜன் அவர்கள், மதிப்பிற்குரிய இயக்குனர் திரு. சுஜித் ஜலால்,
இவர்களுடன் பிரபாலினியின் தந்தை ஈழத்து மெல்லிசை மன்னர் உயர்திரு. எம்.பி. பரமேஷ் அவர்களும் விழாவில் கலந்து கொள்ள, விஜய் தொலைகாட்சி புகழ் உயர்திரு. ஈரோடு மகேஷ் அவர்கள் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜா அவர்களின் பேரன்பையும், நல்லாசியையும் பெற்றிட்டவர் பிரபாலினி என்பது எத்துணை பெருமை!
Queen cobra ஆல்பத்தில் பிரபல திரையிசை பின்னணிப் பாடகர்கள் கிரிஷ், அந்தோணி தாஸ் அவர்களுடன் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் மற்றும் அமெரிக்க Reggae பாடகர் Eddie Blunt மற்றும் Rap பாடகர் Shosoவும் பிரபாலினியின் இசையமைப்பில் பாடியுள்ளனர்.
இப்பொழுது SONY Malaysia மற்றும் malaysia, srilankaவை சார்ந்த “superstar records” “queen Cobra” வீடியோவை உலகளவில் digital distribution செய்ய முன்வந்துள்ளது பிரபாலினியின் சாதனைகளில் இன்னொரு மகுடம்!. பிரபாலினிதான் sonyயுடன் கைகோர்த்த முதலாவது இலங்கைப் பெண் கலைஞர் என்பது இவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி.

திருமணம் என்பது தமிழ்ப் பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரு பகுதிதான், திறமையை மூட்டை கட்டிவைக்க வேண்டிய அவசியமில்லை என்று புரிந்துகொண்ட பிரபாலினி தனது கடமைகளைத் திறம்பட வளர்த்துக்கொண்டு, அத்துடன் லட்சிய பாதையிலும் வெற்றி நடை போடுகிறார் என்பது போற்றுதலுக்குரியதே!
இசைத்துறையில் தமிழ் பெண்களுக்கும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து இன்றைய நம்பிக்கைத் தாரகையாக ஜொலிக்கும் பிரபாலினி பிரபாகரனால் தமிழ்ப் பெண்களுக்கே பெருமைதான். பிரபாலினி, இலங்கையின் முதலாவது தமிழிசைத்தட்டை இயற்றி, இசையமைத்து, பாடி வெளியிட்ட பெருமைக்குரிய மூத்த கலைஞர் “ஈழத்து மெல்லிசை மன்னர் திரு எம்.பி. பரமேஷ் மற்றும் சங்கீத பூஷணம் திருமதி. சிவமாலினி பரமேஷ் அவர்களின் மகளாவார். தாய் – தந்தையருக்குப் பெருமை சேர்க்கும் இந்த தமிழ் மகளின் குரலும் இசையும் மேல்நாடுகளில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவிலும் விரைவில் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரபாலினியின் இசைப்பயணம் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று
நாமும் மனதார வாழ்த்துவோம்!

– சோழ. நாகராஜன் ,
எழுத்தாளர், பத்திரிகையாளர்,
மதுரை – 625 018. தமிழ்நாடு,