சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்!

வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஸ்க் தயாரித்து போட்டால்,

சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு மாஸ்க் தயாரித்து போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்றும், எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் பார்க்கலாம். அதைப் படித்து முயற்சித்து, நீங்கள் வெள்ளையாக ஜொலிக்க ஆரம்பியுங்கள்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு நான்ஸ்டிக் பேனில் கற்றாழை ஜெல்லை சேர்த்து சூடேற்ற வேண்டும். ஜெல் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல்லை பிரஷ் கொண்டு முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி சருமத்தை சிறிது நேரம் 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் ஜொலிப்பதை காணலாம்.