ஏறு தழுவல்! எம் இன உரிமை!-சீமான்!

புரட்சியும் எழுச்சியுமாய்த் தமிழர் இன உரிமைக்காகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று 08-01-2017 மெரினாவில் திரண்ட இளையோர் கூட்டம் புதிய மாற்று அரசியலை உருவாக்கும் என்கிற’

நம்பிக்கையை விதைத்துள்ளது. அதற்குக் காரணமாக இருந்த சமூக வலைதள நண்பர்களுக்கும், இளையோர்களை ஒருங்கிணைத்த பெயர் தெரியாத தம்பிகளுக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகள்!
புரட்சியும் எழுச்சியும் ஒருபோதும் கண்ணாடிக் குவளைக்குள் அடைக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி!
ஏறு தழுவல்! எம் இன உரிமை!
நாம் தமிழர்!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி