‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவின் காதலியாகும் வித்யா பிரதீப்!

அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா.

அதில் ஒன்று பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னேஷ் இயக்கி வரும் ‘ஒத்தைக் ஒத்த’. ‘அரண்மனை’ படத்தை தயாரித்த ’விஷன் மீடியா’ நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். இப்படத்தில் அதர்வாவுடன் தியாகராஜன், ‘அஞ்சாதே’ புகழ் நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு ராமலிங்கம், இசைக்கு ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோருடன் கூட்டணி அமைத்துள்ளனர்.

மாணவர்களின் கல்லுரி வாழக்கை, காதல், தங்களுக்குள் யார் வலியவன் என்பதில் மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் ஆகியவற்றை மையமாக வைத்தே ’ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்களாம். இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த ‘அச்சமின்றி’ படத்திலும் நடித்துள்ளார். கல்லூரி மாணவியாக வரும் வித்யா பிரதீப் அதர்வாவின் காதலியாக ‘ஒத்தைக் ஒத்த’ படத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்தில் நடிக்கவிருக்கும் இன்னொரு நாயகிக்கான தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.