பிரியா பவானியின் ரோல் மாடல் இவர்கள் தானா?!

சாப்ட்வேர் துறையிலிருந்து மீடியாவுக்கு வந்தவர் பிரியா பவான் சங்கர். செய்தி வாசிப்பாளர், சீரியல், டிவி ஷோ என பிசியாக இருப்பவர். கார்த்திக் சுப்புராஜின் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ஹீரொயினாகியுள்ளார். இதில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பிடித்ததை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த துறைக்கு வந்தேன். செய்தி வாசிப்பதை ரசித்து பார்க்கிறோம் என சொல்லும் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள்.

சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்படத்தில் அன்றாட வாழ்வில் நீங்கள் பார்க்கும் பெண்ணாக தான் வருவேன். அதிலும் சென்னை நகர பெண். நல்ல படம். நம்பி வந்து பார்க்கலாம்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்தலில்லை. மேயாத மான் என்னை உள்ளே இழுத்துவிட்டது. தரமணி ஆண்ட்ரியா போல தனித்துவம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

அதே போல பூ படத்தில் வரும் பார்வதியும். காதல், கிசுகிசுக்களை வெறுப்பவர். நடிப்பது பற்றி மட்டுமே பேசக்கூடியவர். இது போல பலர் ரோல் மாடல்களாக தனக்கு இருக்கிறார்கள் என பிரியா கூறியுள்ளார்.