விக்ரம் சீக்ரெட்டை ட்விட்டரில் போட்டுடைத்த பாலாஜி!

நடிகர் விக்ரம் படபிடிப்பில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறார் விக்ரம் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள். ஆர்.ஜே, தொகுப்பாளர், காமெடி நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி தற்போது முன்னணி காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்து படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த தேவி, இவன் தந்திரன் என அனைத்து படங்களிலும் இவருடைய காமெடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இவர் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் சலித்துக்கொள்ளாமல் தனக்கேயுரிய காமெடி பாணியில் பதில் கொடுத்தார்.ஒரு ரசிகர், நடிகர் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ஒரு ரகசியத்தை கூறுங்கள் என்று கேட்டார்.அதற்கு ஆர்.ஜே. பாலாஜி, அவர் போன் செய்தால் நம்பர் தெரியாது பிரைவேட் நம்பர்னு தான் வரும். சீக்ரெட் ஓகேவா என்று பதிவு செய்துள்ளார்.

When he calls, ull not b able to see his no. ‘Private no.’ Nu display aagaum.! Secret ok va 😂😂😂 https://twitter.com/shankarnaresh1/status/910139589083381762