நுகர்வோர் அதிகாரசபைக்கு 81 மில்லியன் வருமானம்!

நுகர்வோர் அதிகாரசபையினால்  இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களினால் 81 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

சுமார் 20,532 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிக விலையில் பொருட்களை விற்றல்,பொருட்களின் விலைப்பட்டியலை குறிப்பிடாமை உள்ளிட்ட காரணங்களால் நுகர்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் வர்த்தகர்களுக்கு எதிராக குறித்த அபராதப் பணம் அறவிடப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.