முருகதாஸின் அடுத்தப்படம் பிரபல படத்தின் ரீமேக்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கபோகிறார் என்று கூறப்பட்டு வந்தது,இதற்க்கு முன்னாடி அவர் இயக்கிய ஸ்பைடர் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால்,அடுத்த படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறார்.ஆனால் தற்பொழுது ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது,அது என்னவென்றால் இயக்குனர் முருகதாஸ் அடுத்த படமாக அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கபோகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படம் ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறபடுகிறது அது என்ன படம் என்றால் மில்லியன் டாலர் பேபி என்ற படம் எனவும் இந்த படம் பாக்ஸிங்கை மையகருவாக கதை உருவாகும் என கூறபடுகிறது.இந்த படத்தில் அக்‌ஷய்குமார் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் புகழ் மரினா குவார் ஆகியோர் நடிக்க இருக்கிறார்,மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது.

அதனால் இப்பொழுது விஜய் படத்தை முருகதாஸ் இயக்குவார,இல்லை அக்‌ஷய் குமார் படத்தை இயக்குவார என விஜய் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.