காலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ !
காலி பிரதேசத்தில் இன்று காலை 6.30 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்கள் அங்கு வரும் போது இரண்டாவது மாடிக்கும் தீ பரவியுள்ளதுடன், தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*