புகையிரத சேவைகளில் இராணுவம்!

புகையிரத பணியாளர்கள் அடிக்கடி முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு முகம்கொடுக்கும் வகையில்,குறித்த துறைகளில் இராணுவத்தினரை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட இராணுவத்தினர் இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி புகையிரத சேவைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக ​அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் மிரட்டல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் புகையிரத பணியாளர்களுக்கு எதிராகவும், அத்தியாவசிய சேவைகள் நிபந்தனையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.