சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம் – நிமிர் பதிப்பகம்!

சந்திக்கும் பல தோழர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று, ‘என்ன புத்தகம் படிக்கலாம், தோழர்?’… அரசியல் சமூக விடைகளுக்கான புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் தேர்ந்தெடுக்க புத்தகங்களையும், எம்முடைய பதிப்புகளையும் தொகுத்து புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறோம். முகநூலில் ஓரிரு வரிகளில் சொல்லுங்கள் என கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை மிக விரிவாக புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறோம்.

பல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களையும் தொகுத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கத்தின் புத்தகங்களையும் இங்கே பெறலாம். ”மே பதினேழு இயக்கக் குரல்” மாத இதழின் சிறப்பிதழையும் பெறலாம். புத்தகங்கள் குறித்த உரையாடலையும் நிகழ்த்தலாம்.

எங்களது அரங்கின் பெயர் ‘ நிமிர் பதிப்பகம்’
அரங்கின் எண் : 342

இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பச்சையப்பன் கல்லூரி எதிரில்.
ஜனவரி 10 முதல் 22 வரை.

தோழர்கள் அரங்குகளில் இருப்போம். புத்தகங்களைப் பற்றியும் விவாதிக்கலாம்.

அவசியம் வாருங்கள்.

தொடர்புக்கு: 9884072010

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*