சாதிக்க மறந்த பாலியன்..!

நாவறுந்து ஊமையாய் போனவரே
நாவழுக்கி நாற்திசையில்
காற்று மண்டலத்தின்
தூசுகளாய்
படிந்தோரே
ஆண்ட தமிழனின்
அடிமை நிலையை
உணர்ந்திடாது
வேட்டி கட்டிய கறுப்பாட்டிற்கு
வர்ணம் தீட்டுவதை
நிறுத்து!

மாசற்ற காற்று மரணித்து
தீயகாற்று தேசத்தைத் தீண்டுகிறது
யாதவர் குடிபுகுந்த மண்ணில்
யாதனை வேரோடிக்
கிடக்கிறது.

புரட்சி விதைத்த மண்ணில்
போதைப் பொதிகள் மிதக்கிறது
பாதை மாறிய சந்ததியொன்று
பாதகம் செய்யத் துணிந்தது.

காயம் தந்ந வலிகள் மீளமுன்
காமம் உதிர்த்த வலிகள் கண்முன்!

போரின் வடுக்கள் தீரமுன்
பாராங்கத்திகளின் கோரம்
பாலியன் கரங்களில்!

சாதிக்க துணிந்த மாதவமண்
சாதிகளின் சகதிகளில் இறுகித்தவிக்குது
சாதிமை பேசிய தமிழினம்
சாதித்தல் மறந்து
சாத்துப்படி கட்டுது.

-தூயவன்-

குறிப்பு:பாலியன்/இளைஞன்
யாதவர்/வேடர்
சாதிமை/பெருமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*