இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் விசாரிக்க ஐ.நாவில் தீர்மானம் தேவை!

இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க

ஐ.நாவில் தீர்மானம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைப் போரில் அனைத்துப் போர்க்குற்றங்களையும் கட்டவிழ்த்து விட்ட இராஜபக்சே அரசு, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்களை கொடூரமாக கொன்றழித்தது.

அதுகுறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்விசாரணைக்கு இலங்கை தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட நிலையில், அவற்றைக் கடந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் கூட்டத்தில் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.