முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அபிவிருத்தி திட்டங்கள் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6 ஆயிரத்து 190

வேலைத்திட்டங்களுக்கு 6788.577 மில்லியன் ரூபாய் மொத்தமாக செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ரூபாவாதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று மாவட்ட அரசாங்க அதிபரினால் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பனை, தென்னை, கடற்தொழில் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் கல்வி திணைக்களங்களின் அபிவிருத்திக்கு எனவும் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.