ஹெட்டன் – வனப் பகுதி ஒன்றில் தீ!

ஹெட்டன் – கொடகல பிரதேசத்தில் வனப் பகுதி ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று பகல் நேரம் தீ பரவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் போது 25 ஏக்கர் நிலப் பரப்பு சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.