வரலாற்றின் தலைமகனே திலீபன்..!

தமிழீழ
வரலாற்றின்
தலைமகனே

தண்ணீருக்கும்
உண்ண உணவுக்கும்
தடை போட்டு
தவம் இருந்தவனே

டெல்லியிலிருந்து
வரம் வருமென்று
வஞ்சிக்க வைத்தாயே
உன் வயிற்றை

பாரத தேசத்தின்
பாசிசம் புரியவைத்தாய்
காந்தி தேசத்தில்
காந்திகள் அல்ல
அகிம்சை கூட இல்லையென
உலகம் உணரவைத்தாய்

உனக்கு
தெரியாதண்ணா
உன்னோடு
நானும் ஒருநாள்
உண்ணாவிரதம் இருந்தது

பசியால்
பட்டுப்போவேனோ என்று
விட்டெழுந்தபோதுதான்
புரிந்தது
பன்னிரண்டு நாட்கள்
புசிக்காமல் இருந்த நீ
பட்டினித்தீக்கு
எப்படி எப்படி எல்லாம்
வெந்து பொசுங்கிப்போய்
இருப்பாயென்று

அகிம்சையையும்
ஆயுதங்களையும்
சம அளவில்
பாவித்து பார்த்தவர்கள்
சொல்ல்கிறோம்

உலகம்
அணைக்க முனைந்த
பெருந்தீச்சுடர் ஒன்று
காற்றின்
அசைவில்
அங்கும் இங்கும் ஆடி
அணையாமல் மீண்டும்
சுடர் வீட்டெரிகிறது

அல்வையூர் தாசன்