பூண்டை இரவில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

மருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் ரத்த உறைவு மற்றும் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்கிறது.
சளி அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் உறங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை பிரச்சனையில் இருந்து நீங்கிவிடலாம். ஆனால் அதற்காக அதிகமாக பூண்டை சாப்பிடக் கூடாது.
பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. எனவே தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயிலிருந்து இருந்து விடுபடலாம்.
காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து, அதன் சாற்றினை அவ்விடத்தில் தடவ வேண்டும்.
இதய குழாயின் தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் தடுத்து, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பு

இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். பூண்டு சாப்பிடுவது சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படுவதை போல உணர்ந்தால், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.