புதிய மழை புத்தக கண்காட்சியும் விற்பனையும்..!

இன்று (07.11.2017) காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை யாழ்.இணுவில் மேற்கு அறிவாலயத்தில் யாழ் மாவட்ட  எழுத்தாளர்களின் படைப்புக்கள் யாழ் மாவட்ட கலாச்சார அதிகார சபையினரால் “புதிய மழை புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்” என்ற செயற்திட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
எழுத்தாளர்களினால் வெளியீடு செய்யப்பட்ட புத்தங்களை காட்சிப்படுத்தலும் விற்பனை செய்தலுமே இதன் நோக்கமாக இருந்த போதிலும் சொற்ப அளவிலான வெளியீட்டாளர்களின் புத்தகங்களே அங்கு காட்சிப் படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.