பெற்றோல் தட்டுப்பாடு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்!

பெற்றோல் தட்டுப்பாடு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பரவிய தகவலால் இன்று மாலை முதல் கொழும்பு உட்படப் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறினார்.

போதியளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது. நாளை அல்லது நாளை மறுதினம் கப்பல் ஒன்று எரிபொருளுடன் கொழும்பு வரவுள்ளது. நாட்டில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.