அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை!




அத்தியவசிய பொருட்களான தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின்  அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இதன் படி தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 130 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாகவும்  நிர்ணயிக்கப்படவுள்ளது.

வாழ்க்கை செலவு குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இந்த உணவு பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*