யாழ் கத்தோலிக்க தேவாலயம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க தேவாலயம் மீது நேற்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புனித அந்தோனியார் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.