விஷத்தை முறித்து சக்தியை தரும் ஒரு அற்புத கீரை எது தெரியுமா?

இந்த செடியின் அழகிய மலர்கள், ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள் போலக் காணப்படுவதால், இந்தச் செடியை தங்க மெழுகுவர்த்தி செடி என்றும் புதர் மெழுகு வர்த்தி செடி என்றும் அழைக்கின்றனர்.

Health benefits of Cassia Alata.

 

சாதாரண மண்ணிலும், ஈரமான ஆற்று மணற்படுகைகளில், ஆற்றங்கரை ஓரங்களில் வளரும் தன்மை மிக்கது, சீமை அகத்தி. தமிழகத்தின் மலைகள் நிரம்பிய தென் மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது, சீமை அகத்திச் செடி.

பனிரெண்டு அடி உயரம் வரை புதர் போல மண்டி வளரும் தன்மை கொண்ட சிறு மரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலைகள் நீண்ட அமைப்பைக் கொண்டிருக்கும், இதன் அழகிய பூக்கள் உதிர்ந்தபின், காய்கள் அடுக்காக காய்க்கும் தன்மைகொண்டவை.

பொதுவாக விதைகள் மூலம் வளர்க்கப்படும் சீமை அகத்தி, நமது நாட்டில் அழகுக்காக, சாலையோரங்களில், வீடுகளில், தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

சிறந்த மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.

 

பொதுவான பயன்கள்:

உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், இரத்த அழுத்த பாதிப்புகளை சரிசெய்யவும், சுவாசக் கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள், பெண்களின் இரத்த சோகை, மாதாந்திர பாதிப்புகள் இவற்றை சரி செய்யும் தன்மை மிக்கது, சீமை அகத்தி. மற்றும் பால்வினை பாதிப்புகளையும் சரியாக்கும்.

சிறுநீரக பாதிப்புகள் நீக்கும் சீமை அகத்தி:

 

சிறுநீரக பாதிப்புகள் நீக்கும் சீமை அகத்தி:

சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு, சிலருக்கு, சிறுநீர் கழிக்க முயற்சித்தாலும், சிறுநீர் கழிக்க முடியாமல், வேதனையில் தவிப்பார்கள். இதற்கு, தீர்வுகாண,

சீமை அகத்தியின் மஞ்சளும் பழுப்பும் கலந்த வண்ண மலர்களை சேகரித்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் அந்த மலர்களை நீரில் இட்டு, நன்கு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை தினமும் பருகி வர, சிறுநீர் கழிக்க முடியாமல் அடைப்பை ஏற்படுத்திய சிறுநீரக பாதிப்புகள் எல்லாம், விலகி, சிறுநீர் முழுமையாக வெளியேறும். சிறுநீர்ப்பையில் தேங்கிய நீர் முழுதும் வெளியேறி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.

 விஷக்கடிகளுக்கு மருந்து:

 

விஷக்கடிகளுக்கு மருந்து:

சில பூச்சிகள் அல்லது வண்டுகள் நம்மை அறியாமல் நம்மீது அவற்றின் எச்சம் பட்டாலோ அல்லது கடித்தாலோ, உடலில் அரிப்பு உண்டாகி, அதை சொரிய, வீக்கமாகி, காயமாகி ஆறாத புண்ணாக மாறிவிடும்.

இதற்கு தீர்வாக, சீமை அகத்தியின் பசுமையான இலைகளை நன்கு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உடலில் அரிப்பு, ஆறாத புண் மற்றும் வண்டுகடி காயங்களின் மேல் தடவி வர, சில நாட்களில், விஷக்கடி பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறி விடும்.

பெண்களின் முக அழகு பொலிவடைய.:

 

பெண்களின் முக அழகு பொலிவடைய.:

சில பெண்களுக்கு வெயிலில் அலைய வேண்டிய பணிச்சூழலால், முகம் கறுத்து, சருமம் வறண்டு போகும். இதனால், முகம் பொலிவிழந்து சோகமாகக் காணப்படுவார்கள்.

இந்த பாதிப்பை சரி செய்ய, அவர்கள் இரவு உறங்குமுன், சீமை அகத்தி இலைகளை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் இதமாக பூசிவிட்டு, காலையில் எழுந்தவுடன் மிருதுவாக முகத்தை நீரில் அலசி வர, வறண்ட சருமம் கொண்ட முகம், மிருதுவாகி, மீண்டும் பொலிவாகும். முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள், சிறிய பூனை முடிகள் நீங்கி, முகம் வனப்புடன் விளங்கும்.

படர் தாமரை பாதிப்பு நீங்க :

 

படர் தாமரை பாதிப்பு நீங்க :

ரிங் வார்ம் எனும் படர் தாமரை, பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் இந்த அடர்ந்த சிவப்பு வண்ண தேமல் போன்ற வடிவம், அரிப்பையும் சொரிந்தால், உடலில் பரவக்கூடிய தன்மையும் கொண்டது.

இந்த படர் தாமரை பாதிப்பை சரி செய்ய, பசுமையான சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காயெண்ணை சேர்த்து, தினமும் இரு வேளை படர் தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.

மலச்சிக்கல் போக்கும், சீமை அகத்தி:

 

மலச்சிக்கல் போக்கும், சீமை அகத்தி:

சிலருக்கு உடலில் என்ன காரணம் என்று தெரியாமல் வலிகள் இருந்துகொண்டே இருக்கும், சிலருக்கு மலச்சிக்கல் காரணமாக, உடல் சோர்வு ஏற்படலாம். இந்த பாதிப்புகள் விலக, சீமை அகத்திச் செடியின் தண்டு பட்டைகளை எடுத்து, நன்கு உலர்த்தி, அதை தூளாக்கி, அதில் சிறிது தூளை தண்ணீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, ஆற வைத்த பின்னர் தினமும், இருவேளை பருகி வர, மலச்சிக்கல் நீங்கி, உடல் வலிகள் விலகி விடும்.

நகச்சொத்தையைப் போக்கும், சீமை அகத்தி:

 

நகச்சொத்தையைப் போக்கும், சீமை அகத்தி:

நகங்களில் சொத்தை ஏற்படுவது சாதாரணமாக இக்கால இளையோரிடத்தில், பெண்களிடம் காணப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத கால்சியம் சத்துக்குறைபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் பற்றாக்குறையாலும், இந்த நகச் சொத்தை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதை சரிசெய்ய, சீமை அகத்தி இலைகள் அல்லது மலர்களை சுத்தம் செய்து, ஒரு வாணலியில் தேங்காயெண்ணை இட்டு அதில் கலக்கி, நன்கு சூடாக்கவும். எண்ணையில் இலைகளின் நீர்ச்சத்து கலந்து, எண்ணை தைலம் போலத் திரண்டு வரும்போது, அடுப்பை அனைத்து, எண்ணையை சேமித்து வைத்துக் கொண்டு, நகச்சுற்று உள்ள விரல் நகங்களில் இந்தத் தைலத்தை தடவி வர, நகச் சுற்று விரைவில் நீங்கி விடும்.

மேலும், நகச் சொத்தை பாதிப்புகளுக்கு, சொத்தை உள்ள நகத்தின் மேல், சீமை அகத்தித் தைலத்தைத் தடவி வர, விரைவில் சொத்தை நகம், நல்ல சுத்தமான நகமாக மாறி விடும்.

மருந்தாகவும் பயன் :

 

மருந்தாகவும் பயன் :

சீமை அகத்தியை, உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்

 

அழகு சாதனத்தில் :

சீமை அகத்திக் கீரை, பூஞ்சைத் தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்று விளங்குவதால், மேலைநாடுகளில் இதன் இலைகள், மலர்கள் மற்றும் விதைகளை குளியல் சோப், ஷாம்பூ மற்றும் அழகு சாதன பொருட்களில் சேர்க்கிறார்கள்.