காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி சம்பந்தன் கேள்வியெழுப்பவில்லை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சகல ஆவணங்களையும் பரணகம ஆணைக்குழுவிடம் கையளித்த போதிலும், அவர்களுக்கு என்ன நடந்தது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினூடாக வாக்குகளை பெற்று தமிழ் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வவனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுமார் 22 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது வாழ்நாட்கள் சிறைக்குள்ளேயே சிதைந்து விட்டதாக கவலை தெரிவப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*