ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை-சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை

செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது ஆறு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதி பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களான மீட்கப்பட்டனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உயிரிழந்த இளம் பெண்ணின் கணவருடைய சகோதரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான தடயங்கள் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.