திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுக்கும் விற்கும் நோக்கம்

இலங்­கையில் சர்­வ­தேச முத­லீ­டு­களை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­

றன. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கும் விற்கும் நோக்கம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. பொய்­யான கருத்­துக்­களை பரப்பி நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர் என சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்தார்.

முன்­னைய அர­சாங்கம் சீனா­வுக்கு நாட்டை விற்ற நிலையில் நாம் நாட்டை மீட்­டுள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­விற்கு விற்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­வ­தாக மஹிந்த தரப்­பினர் தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், இலங்­கையின் கடந்த கால பொரு­ளா­தார நகர்­வு­களும் அர­சியல் கொள்­கை­களும் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­தன. குறிப்­பாக நாட்டின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான நிலை­மையில் மந்­த­க­தியில் காணப்­பட்­டது. அபி­வி­ருத்தி என்ற பெயரில் சர்­வ­தேச நாடு­க­ளிடம் வாங்­கிய கடன்கள் எவையும் உரிய முறையில் செலுத்­தப்­ப­ட­வில்லை.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வது என்ற பெயரில் சீனா­விடம் இருந்து 1.35 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை கட­னாக மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் பெற்­றுள்­ளது. ஆனால் பெற்ற கடன்­களை மீள செலுத்தும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்­க­மாக முன்­னெ­டுக்­க­வில்லை. அதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டு அம்­பாந்­தோட்டை துறை­முக வேலைத்­திட்டம் தொடர்­பான உடன்­ப­டிக்­கையை இலங்கை அர­சங்கம் சீனா­வுடன் மேற்­கொண்­டுள்­ளது.

அப்­போ­தி­லி­ருந்து வரு­டாந்தம் 2 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை நாம் கட­னா­கவும் வட்­டி­யா­கவும் செலுத்தி வரு­கின்றோம். ஆனால், வரு­மானம் மிகவும் குறை­வா­கவே எமக்கு கிடைத்து வரு­கின்­றது. ஆகவே, இந்த பிரச்­சி­னையில் இருந்து மீள வேண்டும் என எமது அர­சாங்கம் பல்­வேறு திட்­டங்­களை மேற்­கொண்­டது.

இறு­தியில் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தும் வகையில் சீனா­வுடன் பேச்­சு­வா­ரத்தை மேற்­கொண்டோம். இந்த பேச்­சு­வார்த்தை மூலம் தீர்­வையும் கண்­டுள்ளோம். இப்­போது நாம் எமது நாட்டை மீட்­டுள்­ள­துடன் வரு­மா­னத்தை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளோம்.

திரு­கோ­ண­மலை துறை­முகம் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாகும். அதை அபி­வி­ருத்தி செய்­வதன் மூலம் வடக்கு, கிழக்கு பகு­தி­களை இல­கு­வாக அபி­வி­ருத்தி செய்ய முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

ஆனால், எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டை சர்­வ­தேச மய­மாக்கும் நட­வ­டிக்­கைக்கு அனு­ம­திக்­க­மாட்டோம். இலங்­கையின் வளங்­க­ளையும் தேசிய பாது­காப்­பையும் பலப்படுத்தி அதன் மூலமாக நாம் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.

பொய்யான கருத்துக்களை கூறி நாட்டு மக்களை குழப்பும் நடவடிக்கைகளை ஒருசிலர் முன்னெடுக்கின்றனர். ஆனால் என்ன கருத்துக்களை கூறினாலும் எமது நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்றார்.