சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி -அரைஇறுதியில் சானியா ஜோடி!

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா– செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் பிரங்கிள் (அமெரிக்கா)– ரோடினோவா (ஆஸ்திரேலியா) இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடந்தது.

ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கனடாவின் பவுச்சார்ட் 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் பாவ்லிசென்கோவாவை (ரஷியா) விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார். ஸ்டிரிகோவா (செக்குடியரசு), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.